animated gif how to

அனர்த்தத்தில் மரணித்தவர்கள் 23 பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 100,000

January 13, 2011 |


January 13, 2011.... AL-IHZAN Local News

பாரிய வெள்ளப் பெருக்கையும் மண்சரிவையும் ஏற்படுத்தியுள்ள அனர்த்தத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது காயமடைந்தவர்கள் 46 என்றும் காணாமல் போனவர் 2 பேர்  என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 511 முகாம்களில் 2 இலட்சம் 1 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளதுடன் 2800 வரையான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 11,338 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது சுமார் நூறு வருடங்களுக்குப் பின்னர் இந்த மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 312 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. இது நாட்டில் மூன்றாவதாகப் பெய்த கூடுதல் மழையாகும் 1913 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 342 மில்லி மீற்றர் மழை பெய்தது. 1917 ஆம் ஆண்டு மே மாதம் இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்டதைப் போன்று தற்போது ஏற்பட்டுள்ளது’ என்று அறிவிக்கப்ட்டுள்ளது கிழக்கு மாகாணத்தின் சில  பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பல பிரதேசங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
மட்டகளப்பு நேற்று





0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!