animated gif how to

இனி சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் ?

December 12, 2010 |

December 12, 2010.... AL-IHZAN Local News

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என  அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது இதன்படி தற்போது தமிழிலும் பாடப்படும் தேசிய கீதம் எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளின் போது பாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் தேசிய கீதத்தில் வரும் மாதா என்ற சொல் வடக்கு – கிழக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் உரித்தான சொல் என்பதை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை ‘National Anthem only in Sinhala; Tamil version out’ என்ற தலைப்பில் செய்தியிட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேறு எந்த நாட்டிலும் தேசிய கீதம் ஒரு மொழிக்கு அதிகமான மொழிகளில் பாடப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, தமது ஆட்சிக்காலத்தின் போது வடக்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது வெளிநடப்பு செய்ததையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை ஒரேநாடு என்ற அடிப்படையில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த கருத்துக்கு அமைச்சர் விமல் வீரவன்ச தமது ஆதரவை வெளியிட்துள்ளார் .
எனினும் அமைச்சர் வாசுதேச நாணயக்கார மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது எனினும் அமைச்சரவை ஜனாதிபதியின் யோசனையை ஏற்றுக் கொண்டது.
News: Lankamuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!