animated gif how to

மேற்குலகின் பிரதான சவால் இஸ்லாம்தான் என்பதை அதன் தலைமைகள் நன்குணர்ந்துள்ளன

December 16, 2010 |

December 16, 2010.... AL-IHZAN Local News

சிறுவர் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் முஸ்தபா ரயீஸ்*
நேர்காணல்: எம்.பி.எம்.பைறூஸ்
கேள்வி : பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் Sri Lanka Islamic Forum UK (SLIFUK) அமைப்பின் தலைவராக இருக்கிறீர்கள். அவ்வாறான ஓர் அமைப்பு ஏன் தோற்றுவிக்கப்பட்டது? அதன் செயற்பாடுகள் என்ன என்பது பற்றிச் சொல்லுங்கள்….?
பதில்: 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் SLIFUK அமைப்புக்கான அடித்தளம் இடப்பட்டது.
அக்காலப்பகுதியில் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வருகை தரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இவர்களில் கணிசமானோர் உயர் கல்விக்காக வந்த மாணவர்கள். அந்த வகையில் இம் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஒரு தேவை வெகுவாக உணரப்பட்டது.
அவ்வாறு வருகை தந்த மாணவர்களில் குறிப்பிடத்தக்களவானோர் இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளில் பின்புலம் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர்.  அங்கு ஆரம்பத்தில் மாணவர்கள் மாத்திரமே இருந்தபோதிலும் பின்னர் அவர்கள் குடும்பங்களாக வும் மாறினார்கள்.
எனவேதான்  இவர்கள் மத்தியில் தஃவா பணியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த 10 வருட காலப் பகுதிக்குள் பிரித்தானியாவுக்கு வருகை  தந்த இலங்கை முஸ்லிம்களின்  எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. நாம் அண்மையில் மேற்கொண்ட அண்ணளவான மதிப்பீடு ஒன்றின்படி பிரித்தானியாவில் மாத்திரம் சுமார் 10,000  இற்கு மேற்பட்ட இலங்கை முஸ்லிம்கள் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இவர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய விழிப்புணர்ச்சியையும் இஸ்லாத்தின் அடிப்படையில் வாழ்வதற்கான வழிகாட்டல்களையும் வழங்குவதுதான் எமது SLIFUK இன் பிரதான நோக்கமாக இருக்கிறது.
கேள்வி : புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் அங்கு ஒரு சக்தியாகத் தொழிற்படுகிறார்கள். குறிப்பாக இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அவ்வப்போது அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று நீங்கள் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக அங்கு ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறீர்களா?
பதில் : வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல தொடர் நிகழ்ச்சிகளை நாம் நடத்தியிருக்கிறோம். அதில் ஒரு நிகழ்ச்சியை பிரித்தானிய பாராளுமன்றத்திலும் நடத்தினோம்.
அதேபோன்றுதான் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் இயங்கும் இனவாதப் போக்கைக் கடைப்பிடிக்காத, நடுநிலையாகச் சிந்திக்கக்கூடிய அமைப்புகளுடன் இணைந்தும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசக் கூடிய பல நிகழ்ச்சிகளை நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இவற்றில் இலங்கையைச் சேர்ந்த பல முஸ்லிம் தலைவர்களும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும்கூட பங்கேற்றிருக்கிறார்கள்.
எமது SLIFUK அமைப்பானது பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லிம்களை மையப்படுத்தியே பணி புரிகின்ற போதிலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அங்கு வாழும் தமிழ் மக்களோடும்  இணைந்து பணியாற்றி வருகிறது. அத்துடன் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடனும் அங்கு வாழுகின்ற சிங்கள மக்களோடும் நாம் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறோம்.
அதேபோன்றுதான் பிரித்தானியாவில் இயங்குகின்ற ஏனைய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களுடன் நாம் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
ஆனால் அங்கு இஸ்லாத்தில் தீவிரப் போக்கை கடைப்பிடிக்கின்ற, அடிக்கடி முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற அமைப்புகளோடு நாம் தொடர்பினை வைத்திருப்பதில்லை.
அதேநேரம் பலஸ்தீன, ஈராக் போன்ற நாடுகளின் பிரச்சினைகள் மேலெழுகின்ற சந்தர்ப்பங்களில் நாம் ஏனைய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் பேரணிகள், ஒன்றுகூடல்களையும் நடத்தியிருக்கிறோம்.
கேள்வி : கடந்த பல வருடங்களாக பிரித்தானியாவில் வசிப்பவர் என்ற வகையில் மேற்குலகில் தற்போது இஸ்லாத்தின் வளர்ச்சி எந்தளவில் உள்ளதாக கருதுகிறீர்கள்?
பதில்: இதற்கான விடையை நான் எனது வார்த்தைகளில் சொல்வதைப் பார்க்கிலும் அண்மையில் பிரித்தானியாவில் இயங்கும் பிரபலமான `பி.பி.சி.-4′ எனும் வானொலி சேவையில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்வதே பொருத்தமானது என நினைக்கிறேன்.
வடக்கு இங்கிலாந்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார். அவரது கூற்றின்படி, இங்கிலாந்தில் மாத்திரம் ஆகக் குறைந்தது வருடத்திற்கு 2500 இற்கு மேற்பட்ட வெள்ளைக்காரர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதாக அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. அதிலும் 50 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்களே எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
“இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்ற மார்க்கம் என்ற கருத்து பரவலாக இருக்கின்ற நிலையில் ஏன் வெள்ளைக்காரப் பெண்கள் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள்?” என அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் கேட்டதற்கு  “ஊடகங்கள்தான் அப்படிப் பிரசாரம் செய்கின்றன. ஆனால் பிரித்தானியர்களோ இஸ்லாம்தான் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கின்ற, அவர்களது உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற மார்க்கம் என்பதை தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள்” என அந்தப் பேராசிரியர் பதிலளித்தார். அதனை நிரூபிக்கும் வகையில் இஸ்லாத்தைத் தழுவிய பெண் ஒருவரும் அந்த நிகழ்ச்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அவரும் “ஆம். இஸ்லாம் எங்களை மதிக்கிறது. எங்களை பாதுகாக்கிறது” எனக் கூறி பேராசிரியரின் கூற்றை உண்மைப்படுத்தினார்.
இந்த வளர்ச்சியினால்தான் மேற்கத்திய சிந்தனைப் போக்குக்கும் மேற்கத்திய கலாசாரத்திற்கும் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கும் பிரதான சவால் இஸ்லாம்தான் என்பதை மேற்குலகின் தலைமைகள் மிகத் தெளிவாக உணர்ந்து வைத்திருக்கின்றன.
அதாவது முஸ்லிம்கள் இஸ்லாம் குறித்து விளங்காத எல்லாவற்றையும் மேற்கு நாடுகளின் தலைமைகள் நன்கு விளங்கி வைத்திருக்கிறார்கள். அரசியல், பொருளாதாரம், சிந்தனை, சமூக எழுச்சி என இஸ்லாம் சொல்லும் சகல விடயங்களையும் மிக ஆழமாக அறிந்து வைத்திருப்பதால்தான் எதிர்காலத்தில் மேற்குலகின் மிகப் பிரதான சவாலாக இஸ்லாம்தான் இருக்கும் என அவர்கள் உணர்கிறார்கள். அதனால்தான் இஸ்லாத்துக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை முடுக்கி விட்டுள்ளார்கள். அந்த போராட்டத்தின் பிரதான ஆயுதமாக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில்தான் இன்று இஸ்லாத்துக்கு எதிரான போராட்டத்தில் மேற்கின் ஊடகங்கள் முன்னிலை வகிக்கின்றன.  மேற்குலகில் உள்ள ஊடகங்களில் பெரும்பாலானவற்றை யூத சியோனிச பின்னணிகளைக் கொண்ட Rupert Murdoch போன்ற சில தனி மனிதர்கள்தான் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
இவர்கள்தான் இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது, பெண்களது உரிமைகளை மறுக்கிறது என்பது போன்ற மிக மோசமான பிரசாரங்களை உலகெங்கிலும் கட்டவிழ்த்திருக்கிறார்கள்.
ஆனால் மறுபுறம் இந்த பிரசாரங்களின் காரணமாக இன்று மேற்குலகில் இஸ்லாம்தான் பிரதான பேசுபொருளாக மாறியிருக்கிறது என்பதே இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயமாகும்.
இன்று இஸ்லாம் அடிக்கடி கதைக்கப்படும் ஒரு விடயமாக மாறியிருக்கிறது. அதனால் பலர் இஸ்லாத்தைப் படிக்கிறார்கள். இஸ்லாத்தை ஒருவர் நடுநிலையான மனதுடன் நின்று படிக்க முற்படுவாராயின் நிச்சயமாக அவர் அதன்பால் ஈர்க்கப்படுவார். அதுதான் இன்று மேற்குலகில் நடக்கிறது.
கேள்வி : மேற்குலகில் முன்னெடுக்கப்படும் தஃவா பிரசார வழிமுறைகளுக்கும் இலங்கை போன்ற நாடுகளில் முன்னெடுக்கப்படும் தஃவா பிரசார வழிமுறைகளுக்குமிடையில் ஏதேனும் வேறுபாடுகளை நீங்கள் காண்கிறீர்களா?
பதில் : நிச்சயமாக. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தஃவா வழிமுறைகளை பார்க்கும்போது இஸ்லாத்தின் ஒரு பகுதிக்கு மாத்திரமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதைக் காண முடிகிறது. அதாவது சில அமல்களை மாத்திரம் சமூகத்தின் மத்தியில் நடைமுறைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டுதான் இங்கு தஃவா பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் மேற்கைப் பொறுத்தவரையில் தஃவா என்பது சிந்தனையை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது. அங்கு சிந்தனைகள் பற்றிய கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள்தான் அதிகம் நடக்கின்றன. அங்கு இஸ்லாத்தின் ஒவ்வொரு பக்கமும் புரட்டப்பட்டு விவாதிக்கப்படுகிறது. ஆழமாக ஆராயப்படுகிறது.  ஆனால் இங்கு சிந்தனையை விட சில அமல்களை மாத்திரம் முக்கியத்துவப்படுத்தியே தஃவா முன்னெடுக்கப்படுவதாக விளங்குகிறது.
அங்கு இஸ்லாம் என்பது ஒரு Hot Issue அல்லது Burning Issue ஆகவே தொடர்ந்தும் இருக்கிறது. அதனால் அங்கு இஸ்லாம் பற்றி அணு அணுவாக ஆராயப்படுகிறது. ஆனால் இங்கு அப்படியல்ல. இஸ்லாம் பற்றிய நமது வரையறைகளை மிகவும் மட்டுப்படுத்தியே வைத்திருக்கிறோம்.
மேற்குலகில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகளைப் பொறுத்தவரையில் எந்தத் தரப்பினரும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாசல்களைத் திறந்து கொடுத்திருக்கின்றன.
அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளின் சிந்தனைகள் குறுகியதாக இல்லை. தஃவா அமைப்புக்களின் பணிகளும் செயற்பாடுகளும் அதற்காக அவர்கள் அமைத்திருக்கும் தளமும் மிகவும் விசாலமானது. மட்டுமன்றி மிகவும் கவர்ச்சிகரமாக தஃவா வழிமுறைகளையும் மேற்குலக தஃவா அமைப்புகள் கொண்டிருக்கின்றன. அதுவும் அங்கு இஸ்லாம் வேகமாகப் பரவுவதற்கு படிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
இன்னுமொரு வார்த்தையில் சொல்லப்போனால் அங்கு இஸ்லாத்தைப் பேசுவதென்பது ஒரு `பெஷன்’ ஆகக்கூட மாறியிருக்கிறது எனச் சொல்லலாம்.
கேள்வி :- மேற்குலகில் வாழுகின்ற மக்கள் தமது நாடுகளின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்பவர்களாக அல்லது தாமும் அந்த நாட்டின் முக்கியமான அங்கத்தினரே எனக் கருதுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ தம்மை ஒரு தனியான குழுவாக ஒதுக்கிக் கொண்டு வாழ்வதாக ஒரு பார்வை இருக்கிறது. இதனை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்?
பதில் :- நல்லதொரு கேள்வி இது. நாம் உரிமைகளை மாத்திரம் கோருபவர்களாகவே இருக்கிறோம். ஆனால் அங்கு வாழ்பவர்கள் அந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துவிட்டு பலனை எல்லோருடனும் இணைந்து பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதாவது அங்குள்ளவர்கள் உரிமைகளை சலுகைகளை கேட்டுப் பெறும் பிச்சைக்காரர்களாக அல்லாது உரிமைகளைப் பங்குபோட்டுக் கொள்ளும் பங்காளிகளாகவே இருக்கிறார்கள்.
அதேபோன்றுதான் நாமும் இந்த நாட்டினுடைய அரசியல், சமூக, பொருளாதார விடயங்களுக்கு பங்களிப்புச் செய்து அதிலிருந்து நமக்குரியதைப் பெற்றுக் கொள்வதுதான் பொருத்தமானதே தவிர வெறுமனே நாட்டின் வளர்ச்சிக்கு எந்தவித பங்களிப்பையும் செய்யாது உரிமையை மாத்திரம் கேட்டுப் போராட்டம் நடத்துவது ஒரு சரியான  வழிமுறையாக அமையாது.
நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதன் ஊடாக எமது தஃவா பிரசாரத்தை மேற்கொள்வோம். அதற்கு ஊடாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம்.
இதற்கு நல்லதொரு உதாரணத்தைச் சொல்லலாம். பிரித்தானியாவில் நடைபெற்ற போருக்கு எதிரான முன்னணியின் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் இவர்களில் மிகச் சொற்பமான முஸ்லிம்கள்தான் கலந்து கொண்டார்கள்.
`போரை எதிர்த்தல்’ என்பது ஒரு பொதுவான கொள்கை. அந்தக் கொள்கைக்காக அவர்கள் தமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டுழைக்கிறார்கள்.
உதாரணமாக இலங்கையில் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடி போன்ற வாழும் எல்லா மக்களையும் பாதிக்கும் வகையிலான ஒருவிடயம் நடைபெறுகிறது என்றால் அதற்காக நாம் ஏனைய எல்லா சமூகங்களுடனும் இணைந்து போராட முன்வர வேண்டும். இது இஸ்லாத்தின் பார்வையிலும் நம்மீதான கடமை மாத்திரமன்றி நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையுமாகும்.
இவ்வாறு பொதுவான விடயங்களில் ஏனைய சமூகங்களுடன் கொள்கையளவில் இணங்கிச் செல்வதன் மூலமாக அந்த சமூகங்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவு பலப்படுகிறது. இதனூடாக இஸ்லாத்தை பற்றி அவர்களுக்கு எடுத்துக்கூற சந்தர்ப்பம் கிடைக்கும்.
கேள்வி :- மேற்குலகில் வாழுகின்ற மக்கள் இஸ்லாம் வலியுறுத்துகின்ற சிறந்த பண்புகளைக் கொண்டவர்களாகவும் முஸ்லிம் நாடுகளில் வாழ்பவர்கள் அவற்றைப் புறந்தள்ளி நடப்பதாகவும் ஒரு பார்வை இருக்கிறது. இது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில் :- “நான் மேற்குலகிற்குச் சென்று பார்த்தேன். அங்கு முஸ்லிம்கள் இல்லை. ஆனால் இஸ்லாம் இருக்கிறது. இங்கு வந்து பார்த்தேன். முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் இல்லை” என்று மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி அவர்களுடைய பிரபலமான கூற்று இருக்கிறது. இதனை என்னால் நிதர்சனமாக உணர முடிகிறது. மிகவும் உண்மையான கருத்தும்கூட.
மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் அங்கு தொழில் புரியும் ஒரு கறுப்பருக்கும் ஒரு வெள்ளையருக்குமிடையிலான சம்பளத்தைத் தீர்மானிப்பது அவரது தகுதிதானே தவிர நிறமோ, இனமோ அல்ல. பிரித்தானிய இளவரசர் வில்லியம் விமானப் படையில் பணிபுரிகிறார். ஆனால் அவருக்கு அங்கு கூடுதல் சம்பளமும் அவருடன் பணிபுரியும் ஒரு கறுப்பினத்தவர்க்கு இதைவிடக் குறைவான சம்பளமும் வழங்கப்படுவதில்லை.
உதாரணமாக நான் பணி புரியும் வைத்தியசாலையை எடுத்துக் கொண்டாலும் எனக்கும் ஒரு வெள்ளைக்காரருக்கும் ஒரு கறுப்பினருக்கும் வழங்கப்படும் சம்பளம் ஒரே அளவானதாகவே இருக்கும். ஆனால் அதனை தீர்மானிப்பது எமது தகுதியே அன்றி இனமோ, மதமோ, நாடோ அல்ல. இதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது.
ஆனால் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பாருங்கள். அங்கு ஒரு தொழிலுக்காக அமெரிக்க கடவுச் சீட்டுடன் சென்றால் அதற்கு ஒரு சம்பளமும், பிரிட்டன் கடவுச்சீட்டுடன் போனால் இரு மடங்கு சம்பளமும் இலங்கை கடவுச் சீட்டுடன் போனால் சாதாரண சம்பளத்தையும் விடக் குறைவாகத்தான் கிடைக்கும்.
ஆகவே சவூதியில் இஸ்லாம் இருக்கிறதா? பிரிட்டனில் இஸ்லாம் இருக்கிறதா?
இப்படி ஒவ்வொரு துறைகளிலும் இந்த வேறுபாடுகளை எம்மால் அவதானிக்க முடியும். பண்பாடுகள், நடத்தைகள் அனைத்திலும் அங்கு இஸ்லாம் சொல்லும் பண்புகளை அவதானிக்க முடியும்.
சுத்தம், சுகாதாரம், எதையும் மிகச் சரியாகச் செய்ய முனைவது, நேரத்தை முகாமைத்துவம் செய்து, சட்டதிட்டங்களை மதிப்பது என எல்லா விடயங்களிலும் அவர்கள் மிகச் சிறந்த நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். அதாவது இஸ்லாம் ஒரு மனிதனிடம் எதிர்பார்க்கின்ற விடயங்களில் பெரும்பாலானவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
இதற்குக் காரணம் அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்களின் அறிவுத்தரம் மிகச் சிறந்ததாக இருப்பதாகும்.
ஆனால் அங்கு இத்தனையையும் ஒழுங்காகச் செய்யும் அவர்களிடம் ஈமான் மட்டும் இல்லை என்பதுதான் கவலைக்குரியது.
நன்றி: விடிவெள்ளி
********************************************************************************************************
*டாக்டர் முஸ்தபா ரயீஸ். அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்டவர். `அல்ஹஸனாத்’ சஞ்சிகையில் `எனது டயரியின் மறுபக்கம்’ எனும் தொடர் கட்டுரையை எழுதியதன் மூலம் பிரபல்யமானவர்.
அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பயின்று ருகுணு பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிறுவர் நோய் நல வைத்திய துறையில் கலாநிதி பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
பின்னர் மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்குச் சென்று சிறுவர் நோய் நல ரோயல் கல்லூரியில் அங்கத்தும் பெற்றதோடு சிறுவர் நோய் நல துறையிலும் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் விசேட பட்டப் பின்படிப்பையும் பூர்த்தி செய்திருக்கிறார். மட்டுமன்றி அமெரிக்காவில் உள்ள Urea Cycle  எனும் நோய் தொடர்பான ஆராய்ச்சி  நிறுவனத்தின் அங்கத்தவராக இருப்பதோடு அது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப்பித்து வருகிறார். அத்துடன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ICU Transport Service துறையில் விசேட சான்றிதழ் கற்கை நெறியையும் பூர்த்தி செய்திருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து வைத்தியசாலை ஒன்றின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு வைத்திய அதிகாரியாகவும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக சிறுவர் நோய் நல மருத்துவத்துறை தலைவராகவும் கடமையாற்றுகிறார்.
கடந்த பல வருடங்களாக பிரித்தானியாவில் வசித்துவ ரும் இவர் பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் Sri Lanka Islamic Forum UK (SLIFUK) அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.
கேள்வி : பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் Sri Lanka Islamic Forum UK (SLIFUK) அமைப்பின் தலைவராக இருக்கிறீர்கள். அவ்வாறான ஓர் அமைப்பு ஏன் தோற்றுவிக்கப்பட்டது? அதன் செயற்பாடுகள் என்ன என்பது பற்றிச் சொல்லுங்கள்….? 
பதில்: 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் SLIFUK அமைப்புக்கான அடித்தளம் இடப்பட்டது.
அக்காலப்பகுதியில் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வருகை தரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இவர்களில் கணிசமானோர் உயர் கல்விக்காக வந்த மாணவர்கள். அந்த வகையில் இம் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஒரு தேவை வெகுவாக உணரப்பட்டது.
அவ்வாறு வருகை தந்த மாணவர்களில் குறிப்பிடத்தக்களவானோர் இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளில் பின்புலம் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர்.  அங்கு ஆரம்பத்தில் மாணவர்கள் மாத்திரமே இருந்தபோதிலும் பின்னர் அவர்கள் குடும்பங்களாக வும் மாறினார்கள்.
எனவேதான்  இவர்கள் மத்தியில் தஃவா பணியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த 10 வருட காலப் பகுதிக்குள் பிரித்தானியாவுக்கு வருகை  தந்த இலங்கை முஸ்லிம்களின்  எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. நாம் அண்மையில் மேற்கொண்ட அண்ணளவான மதிப்பீடு ஒன்றின்படி பிரித்தானியாவில் மாத்திரம் சுமார் 10,000  இற்கு மேற்பட்ட இலங்கை முஸ்லிம்கள் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இவர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய விழிப்புணர்ச்சியையும் இஸ்லாத்தின் அடிப்படையில் வாழ்வதற்கான வழிகாட்டல்களையும் வழங்குவதுதான் எமது SLIFUK இன் பிரதான நோக்கமாக இருக்கிறது.

கேள்வி : புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் அங்கு ஒரு சக்தியாகத் தொழிற்படுகிறார்கள். குறிப்பாக இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அவ்வப்போது அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று நீங்கள் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக அங்கு ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறீர்களா?
பதில் : வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல தொடர் நிகழ்ச்சிகளை நாம் நடத்தியிருக்கிறோம். அதில் ஒரு நிகழ்ச்சியை பிரித்தானிய பாராளுமன்றத்திலும் நடத்தினோம்.
அதேபோன்றுதான் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் இயங்கும் இனவாதப் போக்கைக் கடைப்பிடிக்காத, நடுநிலையாகச் சிந்திக்கக்கூடிய அமைப்புகளுடன் இணைந்தும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசக் கூடிய பல நிகழ்ச்சிகளை நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இவற்றில் இலங்கையைச் சேர்ந்த பல முஸ்லிம் தலைவர்களும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும்கூட பங்கேற்றிருக்கிறார்கள்.
எமது SLIFUK அமைப்பானது பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லிம்களை மையப்படுத்தியே பணி புரிகின்ற போதிலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அங்கு வாழும் தமிழ் மக்களோடும்  இணைந்து பணியாற்றி வருகிறது. அத்துடன் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடனும் அங்கு வாழுகின்ற சிங்கள மக்களோடும் நாம் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறோம்.
அதேபோன்றுதான் பிரித்தானியாவில் இயங்குகின்ற ஏனைய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களுடன் நாம் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
ஆனால் அங்கு இஸ்லாத்தில் தீவிரப் போக்கை கடைப்பிடிக்கின்ற, அடிக்கடி முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற அமைப்புகளோடு நாம் தொடர்பினை வைத்திருப்பதில்லை.
அதேநேரம் பலஸ்தீன, ஈராக் போன்ற நாடுகளின் பிரச்சினைகள் மேலெழுகின்ற சந்தர்ப்பங்களில் நாம் ஏனைய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் பேரணிகள், ஒன்றுகூடல்களையும் நடத்தியிருக்கிறோம்.
கேள்வி : கடந்த பல வருடங்களாக பிரித்தானியாவில் வசிப்பவர் என்ற வகையில் மேற்குலகில் தற்போது இஸ்லாத்தின் வளர்ச்சி எந்தளவில் உள்ளதாக கருதுகிறீர்கள்?
பதில்: இதற்கான விடையை நான் எனது வார்த்தைகளில் சொல்வதைப் பார்க்கிலும் அண்மையில் பிரித்தானியாவில் இயங்கும் பிரபலமான `பி.பி.சி.-4′ எனும் வானொலி சேவையில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்வதே பொருத்தமானது என நினைக்கிறேன்.
வடக்கு இங்கிலாந்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார். அவரது கூற்றின்படி, இங்கிலாந்தில் மாத்திரம் ஆகக் குறைந்தது வருடத்திற்கு 2500 இற்கு மேற்பட்ட வெள்ளைக்காரர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதாக அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. அதிலும் 50 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்களே எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
“இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்ற மார்க்கம் என்ற கருத்து பரவலாக இருக்கின்ற நிலையில் ஏன் வெள்ளைக்காரப் பெண்கள் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள்?” என அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் கேட்டதற்கு  “ஊடகங்கள்தான் அப்படிப் பிரசாரம் செய்கின்றன. ஆனால் பிரித்தானியர்களோ இஸ்லாம்தான் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கின்ற, அவர்களது உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற மார்க்கம் என்பதை தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள்” என அந்தப் பேராசிரியர் பதிலளித்தார். அதனை நிரூபிக்கும் வகையில் இஸ்லாத்தைத் தழுவிய பெண் ஒருவரும் அந்த நிகழ்ச்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அவரும் “ஆம். இஸ்லாம் எங்களை மதிக்கிறது. எங்களை பாதுகாக்கிறது” எனக் கூறி பேராசிரியரின் கூற்றை உண்மைப்படுத்தினார்.
இந்த வளர்ச்சியினால்தான் மேற்கத்திய சிந்தனைப் போக்குக்கும் மேற்கத்திய கலாசாரத்திற்கும் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கும் பிரதான சவால் இஸ்லாம்தான் என்பதை மேற்குலகின் தலைமைகள் மிகத் தெளிவாக உணர்ந்து வைத்திருக்கின்றன.
அதாவது முஸ்லிம்கள் இஸ்லாம் குறித்து விளங்காத எல்லாவற்றையும் மேற்கு நாடுகளின் தலைமைகள் நன்கு விளங்கி வைத்திருக்கிறார்கள். அரசியல், பொருளாதாரம், சிந்தனை, சமூக எழுச்சி என இஸ்லாம் சொல்லும் சகல விடயங்களையும் மிக ஆழமாக அறிந்து வைத்திருப்பதால்தான் எதிர்காலத்தில் மேற்குலகின் மிகப் பிரதான சவாலாக இஸ்லாம்தான் இருக்கும் என அவர்கள் உணர்கிறார்கள். அதனால்தான் இஸ்லாத்துக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை முடுக்கி விட்டுள்ளார்கள். அந்த போராட்டத்தின் பிரதான ஆயுதமாக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில்தான் இன்று இஸ்லாத்துக்கு எதிரான போராட்டத்தில் மேற்கின் ஊடகங்கள் முன்னிலை வகிக்கின்றன.  மேற்குலகில் உள்ள ஊடகங்களில் பெரும்பாலானவற்றை யூத சியோனிச பின்னணிகளைக் கொண்ட Rupert Murdoch போன்ற சில தனி மனிதர்கள்தான் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
இவர்கள்தான் இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது, பெண்களது உரிமைகளை மறுக்கிறது என்பது போன்ற மிக மோசமான பிரசாரங்களை உலகெங்கிலும் கட்டவிழ்த்திருக்கிறார்கள்.
ஆனால் மறுபுறம் இந்த பிரசாரங்களின் காரணமாக இன்று மேற்குலகில் இஸ்லாம்தான் பிரதான பேசுபொருளாக மாறியிருக்கிறது என்பதே இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயமாகும்.
இன்று இஸ்லாம் அடிக்கடி கதைக்கப்படும் ஒரு விடயமாக மாறியிருக்கிறது. அதனால் பலர் இஸ்லாத்தைப் படிக்கிறார்கள். இஸ்லாத்தை ஒருவர் நடுநிலையான மனதுடன் நின்று படிக்க முற்படுவாராயின் நிச்சயமாக அவர் அதன்பால் ஈர்க்கப்படுவார். அதுதான் இன்று மேற்குலகில் நடக்கிறது.
கேள்வி : மேற்குலகில் முன்னெடுக்கப்படும் தஃவா பிரசார வழிமுறைகளுக்கும் இலங்கை போன்ற நாடுகளில் முன்னெடுக்கப்படும் தஃவா பிரசார வழிமுறைகளுக்குமிடையில் ஏதேனும் வேறுபாடுகளை நீங்கள் காண்கிறீர்களா?
பதில் : நிச்சயமாக. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தஃவா வழிமுறைகளை பார்க்கும்போது இஸ்லாத்தின் ஒரு பகுதிக்கு மாத்திரமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதைக் காண முடிகிறது. அதாவது சில அமல்களை மாத்திரம் சமூகத்தின் மத்தியில் நடைமுறைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டுதான் இங்கு தஃவா பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் மேற்கைப் பொறுத்தவரையில் தஃவா என்பது சிந்தனையை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது. அங்கு சிந்தனைகள் பற்றிய கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள்தான் அதிகம் நடக்கின்றன. அங்கு இஸ்லாத்தின் ஒவ்வொரு பக்கமும் புரட்டப்பட்டு விவாதிக்கப்படுகிறது. ஆழமாக ஆராயப்படுகிறது.  ஆனால் இங்கு சிந்தனையை விட சில அமல்களை மாத்திரம் முக்கியத்துவப்படுத்தியே தஃவா முன்னெடுக்கப்படுவதாக விளங்குகிறது.
அங்கு இஸ்லாம் என்பது ஒரு Hot Issue அல்லது Burning Issue ஆகவே தொடர்ந்தும் இருக்கிறது. அதனால் அங்கு இஸ்லாம் பற்றி அணு அணுவாக ஆராயப்படுகிறது. ஆனால் இங்கு அப்படியல்ல. இஸ்லாம் பற்றிய நமது வரையறைகளை மிகவும் மட்டுப்படுத்தியே வைத்திருக்கிறோம்.
மேற்குலகில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகளைப் பொறுத்தவரையில் எந்தத் தரப்பினரும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாசல்களைத் திறந்து கொடுத்திருக்கின்றன.
அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளின் சிந்தனைகள் குறுகியதாக இல்லை. தஃவா அமைப்புக்களின் பணிகளும் செயற்பாடுகளும் அதற்காக அவர்கள் அமைத்திருக்கும் தளமும் மிகவும் விசாலமானது. மட்டுமன்றி மிகவும் கவர்ச்சிகரமாக தஃவா வழிமுறைகளையும் மேற்குலக தஃவா அமைப்புகள் கொண்டிருக்கின்றன. அதுவும் அங்கு இஸ்லாம் வேகமாகப் பரவுவதற்கு படிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
இன்னுமொரு வார்த்தையில் சொல்லப்போனால் அங்கு இஸ்லாத்தைப் பேசுவதென்பது ஒரு `பெஷன்’ ஆகக்கூட மாறியிருக்கிறது எனச் சொல்லலாம்.
கேள்வி :- மேற்குலகில் வாழுகின்ற மக்கள் தமது நாடுகளின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்பவர்களாக அல்லது தாமும் அந்த நாட்டின் முக்கியமான அங்கத்தினரே எனக் கருதுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ தம்மை ஒரு தனியான குழுவாக ஒதுக்கிக் கொண்டு வாழ்வதாக ஒரு பார்வை இருக்கிறது. இதனை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்?
பதில் :- நல்லதொரு கேள்வி இது. நாம் உரிமைகளை மாத்திரம் கோருபவர்களாகவே இருக்கிறோம். ஆனால் அங்கு வாழ்பவர்கள் அந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துவிட்டு பலனை எல்லோருடனும் இணைந்து பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதாவது அங்குள்ளவர்கள் உரிமைகளை சலுகைகளை கேட்டுப் பெறும் பிச்சைக்காரர்களாக அல்லாது உரிமைகளைப் பங்குபோட்டுக் கொள்ளும் பங்காளிகளாகவே இருக்கிறார்கள்.
அதேபோன்றுதான் நாமும் இந்த நாட்டினுடைய அரசியல், சமூக, பொருளாதார விடயங்களுக்கு பங்களிப்புச் செய்து அதிலிருந்து நமக்குரியதைப் பெற்றுக் கொள்வதுதான் பொருத்தமானதே தவிர வெறுமனே நாட்டின் வளர்ச்சிக்கு எந்தவித பங்களிப்பையும் செய்யாது உரிமையை மாத்திரம் கேட்டுப் போராட்டம் நடத்துவது ஒரு சரியான  வழிமுறையாக அமையாது.
நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதன் ஊடாக எமது தஃவா பிரசாரத்தை மேற்கொள்வோம். அதற்கு ஊடாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம்.
இதற்கு நல்லதொரு உதாரணத்தைச் சொல்லலாம். பிரித்தானியாவில் நடைபெற்ற போருக்கு எதிரான முன்னணியின் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் இவர்களில் மிகச் சொற்பமான முஸ்லிம்கள்தான் கலந்து கொண்டார்கள்.
`போரை எதிர்த்தல்’ என்பது ஒரு பொதுவான கொள்கை. அந்தக் கொள்கைக்காக அவர்கள் தமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டுழைக்கிறார்கள்.
உதாரணமாக இலங்கையில் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடி போன்ற வாழும் எல்லா மக்களையும் பாதிக்கும் வகையிலான ஒருவிடயம் நடைபெறுகிறது என்றால் அதற்காக நாம் ஏனைய எல்லா சமூகங்களுடனும் இணைந்து போராட முன்வர வேண்டும். இது இஸ்லாத்தின் பார்வையிலும் நம்மீதான கடமை மாத்திரமன்றி நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையுமாகும்.
இவ்வாறு பொதுவான விடயங்களில் ஏனைய சமூகங்களுடன் கொள்கையளவில் இணங்கிச் செல்வதன் மூலமாக அந்த சமூகங்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவு பலப்படுகிறது. இதனூடாக இஸ்லாத்தை பற்றி அவர்களுக்கு எடுத்துக்கூற சந்தர்ப்பம் கிடைக்கும்.
கேள்வி :- மேற்குலகில் வாழுகின்ற மக்கள் இஸ்லாம் வலியுறுத்துகின்ற சிறந்த பண்புகளைக் கொண்டவர்களாகவும் முஸ்லிம் நாடுகளில் வாழ்பவர்கள் அவற்றைப் புறந்தள்ளி நடப்பதாகவும் ஒரு பார்வை இருக்கிறது. இது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில் :- “நான் மேற்குலகிற்குச் சென்று பார்த்தேன். அங்கு முஸ்லிம்கள் இல்லை. ஆனால் இஸ்லாம் இருக்கிறது. இங்கு வந்து பார்த்தேன். முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் இல்லை” என்று மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி அவர்களுடைய பிரபலமான கூற்று இருக்கிறது. இதனை என்னால் நிதர்சனமாக உணர முடிகிறது. மிகவும் உண்மையான கருத்தும்கூட.
மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் அங்கு தொழில் புரியும் ஒரு கறுப்பருக்கும் ஒரு வெள்ளையருக்குமிடையிலான சம்பளத்தைத் தீர்மானிப்பது அவரது தகுதிதானே தவிர நிறமோ, இனமோ அல்ல. பிரித்தானிய இளவரசர் வில்லியம் விமானப் படையில் பணிபுரிகிறார். ஆனால் அவருக்கு அங்கு கூடுதல் சம்பளமும் அவருடன் பணிபுரியும் ஒரு கறுப்பினத்தவர்க்கு இதைவிடக் குறைவான சம்பளமும் வழங்கப்படுவதில்லை.
உதாரணமாக நான் பணி புரியும் வைத்தியசாலையை எடுத்துக் கொண்டாலும் எனக்கும் ஒரு வெள்ளைக்காரருக்கும் ஒரு கறுப்பினருக்கும் வழங்கப்படும் சம்பளம் ஒரே அளவானதாகவே இருக்கும். ஆனால் அதனை தீர்மானிப்பது எமது தகுதியே அன்றி இனமோ, மதமோ, நாடோ அல்ல. இதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது.
ஆனால் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பாருங்கள். அங்கு ஒரு தொழிலுக்காக அமெரிக்க கடவுச் சீட்டுடன் சென்றால் அதற்கு ஒரு சம்பளமும், பிரிட்டன் கடவுச்சீட்டுடன் போனால் இரு மடங்கு சம்பளமும் இலங்கை கடவுச் சீட்டுடன் போனால் சாதாரண சம்பளத்தையும் விடக் குறைவாகத்தான் கிடைக்கும்.
ஆகவே சவூதியில் இஸ்லாம் இருக்கிறதா? பிரிட்டனில் இஸ்லாம் இருக்கிறதா?
இப்படி ஒவ்வொரு துறைகளிலும் இந்த வேறுபாடுகளை எம்மால் அவதானிக்க முடியும். பண்பாடுகள், நடத்தைகள் அனைத்திலும் அங்கு இஸ்லாம் சொல்லும் பண்புகளை அவதானிக்க முடியும்.
சுத்தம், சுகாதாரம், எதையும் மிகச் சரியாகச் செய்ய முனைவது, நேரத்தை முகாமைத்துவம் செய்து, சட்டதிட்டங்களை மதிப்பது என எல்லா விடயங்களிலும் அவர்கள் மிகச் சிறந்த நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். அதாவது இஸ்லாம் ஒரு மனிதனிடம் எதிர்பார்க்கின்ற விடயங்களில் பெரும்பாலானவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
இதற்குக் காரணம் அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்களின் அறிவுத்தரம் மிகச் சிறந்ததாக இருப்பதாகும்.
ஆனால் அங்கு இத்தனையையும் ஒழுங்காகச் செய்யும் அவர்களிடம் ஈமான் மட்டும் இல்லை என்பதுதான் கவலைக்குரியது.
நன்றி: விடிவெள்ள

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!