October 16, 2010
கஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது அல்ல என்றும் இணைக்கப்பட்டது என்ற அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கூற்றிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆதரவு தெரிவித்துள்ளார். உமர் அப்துல்லாஹ் இதுக்குறித்து தவறாக பேசியதாக தான் கருதவில்லை எனவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்பொழுது; "மைசூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது போன்றுதான் கஷ்மீரும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. கஷ்மீர் விஷயத்தில் சம்பவித்தது போலத்தான் மைசூர் ராஜாவும் இந்தியாவுடன் இணைப்பதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
கஷ்மீர் இந்தியாவின் சட்டத்திற்குட்பட்ட பகுதியாகும். கஷ்மீரிலிருந்து செல்பவர்களுக்கு தனி விசா வழங்கும் சீனாவின் நடவடிக்கைக் குறித்து அந்நாட்டிடம் அறிவித்துள்ளோம்.
உறவை மேம்படுத்த வேண்டுமென்றால் இரு நாடுகளும் பரஸ்பரம் நிலைநிற்கு சந்தேகங்களை புரிந்துக்கொள்ள வேண்டும் என சீனாவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும், இந்தியாவும் பெரும் சக்திகளாகும். அந்நிலையில் செய்திகளை இருநாடுகளும் வெளியிடும். ஆதலால் இரு நாடுகளும் மோதிக்கொள்கின்றன என்பது பொருளல்ல.
சீனாவுடன் இந்தியாவுக்கு நல்லுறவு உள்ளது. எல்லைத் தகராறு போன்ற சில பிரச்சனைகள் தற்போதும் உள்ளன. இதற்கு பரிகாரம் காண்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. எல்லைப் பிரச்சனையில் 14-ஆம் கட்ட பேச்சுவார்த்தை உடன் நடைபெறும். தர்க்கத்தை தீர்க்க இரு நாடுகளும் தயாராகவே உள்ளன.
அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். தேர்தல்களில் அங்கு 75 சதவீத மக்கள் பங்கேற்கின்றனர். இதுவே அதற்கு போதிய ஆதாரமாகும்." இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துரைகள் :
Post a Comment