animated gif how to

மேற்கு கரையில் மஸ்ஜிதிற்கு தீவைத்த சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலிய அதிகாரி - ஈரான் குற்றச்சாட்டு

October 07, 2010 |

October 07, 2010




ஃபலஸ்தீனின் மேற்கு கரையில் மஸ்ஜித் தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலிய அரசு அதிகாரியொருவர் செயல்பட்டுள்ளதாகவும், மதங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரெமின் மெஹ்மான் பெரஸ்த் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் அவர், இஸ்ரேலின் உண்மையான முகம்தான் இத்தாக்குதல் மூலம் வெளிப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், கட்டுப்படுத்த முடியாத பதிலடிகளை இஸ்ரேல் சந்திக்க வேண்டிவரும் என எச்சரித்துள்ளார்.



வடக்கு மேற்குகரையில் நேற்று முன் தினம் பைத் ஃபஜர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதை யூதக் குடியேற்றக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர். அத்தோடு, மஸ்ஜிதிலிருந்த திருக்குர்ஆன் பிரதிகளை தீவைத்துக் கொளுத்தி, முஹம்மது நபியைக் குறித்து சுவர்களில் மோசமாக எழுதியுள்ளனர்.



இதற்கிடையே, மேற்குகரையில் பூர் என்ற இடத்திலுள்ள மஸ்ஜிதை இடிக்கவேண்டும் எனக்கோரி இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் ஒன்றுகூடியுள்ளதாக வைனட் நியூஸின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.



மேற்கு ஆசியாவில் கலவரத்தை உருவாக்கும் முயற்சி இது என ஃபலஸ்தீனிகள் கூறுகின்றனர்.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!