animated gif how to

அமெரிக்க உதவியின்றி செயல்படுவதாலேயே ஈரான் மீது பொருளாதாரத் தடை: அஹமதி நிஜாத்

September 18, 2010 |

September 18, 2010
அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் உதவியின்றி செயல்படுவதாலேயே ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது:

"நாங்கள் சரியான முறையிலேயே அணு திட்டங்களை பயன்படுத்தி வருகிறோம். அணு சக்திக்காக மட்டுமே அணு திட்டங்களை பயன்படுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.
சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவில் மதபோதகர் ஒருவர் குர்ஆனை எரிக்கப் போவதாக அறிவித்தது குறித்து கேட்டதற்கு, "இதன் மூலம் இரு மதங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முடியாது. முஸ்லிம்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் இடையே பிரச்னையை தூண்டிவிடும் வகையில் குறுகிய எண்ணம் கொண்ட சில அமெரிக்கர்கள் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்" என்று குறிப்பிட்டார்.

"குர்ஆன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புனிதமான இறைவேதம், அது எரிக்கக்கூடியது அல்ல" என்று கூறினார்.

அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுக்கூட்டத்தில் அஹமதி நிஜாத் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. யுரேனியம் செறிவூட்டலை நிறுத்திக் கொள்ள வேண்டும்; பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூறியிருந்தது. ஆனால் அதை ஈரான் ஏற்க மறுத்ததையடுத்து ஜூன் மாதம் 4-வது முறையாக ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!