அமெரிக்காவின் பிளோரிடா மாநிலத்தில் உள்ள கிறித்தவ திருச்சபை ஒன்று தான் புனித அல் குர் ஆன் பிரதிகளை செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி எரிக்க போவதாக அறிவித்தது அதை தொடர்ந்து ஆர்பாட்டங்கள் உலகின் பல நாடுகளிலும் வெடித்தது இன்று வெள்ளி கிழமை உலகின் பல பாகங்களிலும் கடும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன இதில் பலர் காயமடைதுள்ளனர் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஒருவர் வபதாத்கியுள்ளார் பலமான கண்டனங்கள் அமெரிக்காவின் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எழுந்தது இந்த கண்டனங்களை தொடர்ந்து ஒபாமாவின் நிர்வாகம் கேட்டுகொண்டதற்கு இணங்க அல் குர்ஆன் எரிப்பு திட்டத்தை இடைநிறுத்துவதாக கிறிஸ்தவ போதகர் டெர்ரி ஜோன்ஸ் தெரிவித்துள்ளான்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் நினைவு நாளை அல் குர்ஆனை எரிக்கும் நாளாக அந்த கிறித்தவ திருச்சபை பிரகடனப்படுதி 200 அல் குர் ஆன்களை எரிக்க தீர்மானித்துள்ளதாக கிறிஸ்தவ திருச்சபை ஒன்று அறிவித்தது உலகம் முழுவதிலும் வன்முறைகள் தூண்ட காரணமாக அமைத்துள்ளது.
நன்றி: lankamuslim
RSS Feed
September 11, 2010
|




1 கருத்துரைகள் :
Yes Allah will protect his qurhan
Post a Comment