August 27, 2010
இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே பத்ர் போராகும். இந்த போர்இஸ்லாமிய வரலாற்றில் முதல் போராகும் போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த போர் . இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் -ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடைபெற்றுள்ளது.
உண்மையில் இந்த களத்தில் கொள்கைக்காக இரத்த உறவுகள் தமக்குள் மோதிகொண்டது தந்தையும் மகனும் மோதிக்கொண்டனர் , சகோதரர்கள் மோதிக்கொண்டனர், நண்பர்கள் மோதிக்கொண்டனர் இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் கொள்கைக்காக இரத்த உறவுகளை களத்தில் சந்தித்தனர் இரத்த உறவுமுறையை விடவும் அதிக பலம் வாய்ந்தது இஸ்லாமிய கொள்கை என்பதை முஸ்லிம்கள் களத்தில் நீருபித்தனர் இந்த கொள்கை உணர்வினகாரனமாக அதிக எண்ணிக்கை கொண்ட பலமான படையை ஒரு சிறிய படை எதிர்கொண்டது வெற்றிபெற்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment