animated gif how to

காத்தான்குடியில் இன்று ஷுஹதாக்கள் நினைவு தினம்

August 03, 2010 |

காத்தான்குடியில் இன்று (3.8.2010)ஷுஹதாக்கள் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
03.08.1990 அன்று காத்தான்குடி 01 மீரா ஜும்மா பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாபள்ளிவாயலில் இஷா தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள், LTTEபயங்கரவாதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தினம் ஷுஹதாக்களின் நினைவாக ஷுஹதாக்கள் தினமாக வருடாந்தம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
20வது ஆண்டு ஷுஹதாக்கள் தினத்தையொட்டி இன்று காலை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா பள்ளிவாயலில் குர்ஆன் ஓதுதல் மற்றும் பிராத்தனை என்பன இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் ஷுஹதாக்களின் நினைவாக அவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் மீரா பள்ளிவாயலினால் நேற்று மாலை வழங்கப்பட்டன.
kattankudi.info விஷேட செய்தியாளர்.
Video (04.08.1990) 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!