animated gif how to

மூன்றாம் உலக போரே வந்தாலும் சீனா ஈரானை பாதுகாக்கும்

December 10, 2011 |

December 10, 2011.... AL-IHZAN World News
பிய்ஜிங்: ஈரானை பாதுகாப்பதற்காக மூன்றாம் உலகப் போரே உருவானாலும் சீனா ஈரானுக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கும் என மேஜர் ஜெனரல் ஜாங் ஜாவொஜாங் கூறினார்.


தெஹ்ரான் அணு ஆயுத சோதனையை காரணம் காட்டி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், தொடர்ந்து ஈரானை அச்சுறுத்தி வந்தபோது அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி தொழில் நுட்பத்தை பயன்படுத்த அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் அனுமதி இருப்பதை சுட்டி காட்டி ஈரான் அதை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புகளை அதிகரித்த நிலையில் நவம்பர் 21 ஆம் தேதி அன்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுத் பாரக் ஈரானை சமாளிக்க சரியான தருணம் வந்துவிட்டது எனவும் ஜனாதிபதி ஷைமன் பெரஸ் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாகவும் கூறி ஈரானை எச்சரித்துள்ளார்...

மேலும் இது பற்றி ஈரான் இராணுவ அதிகாரிகள் கூறும்போது இப்பாதுகாப்பற்ற சூழல் மத்திய கிழக்கு நாடுகளை தாண்டி எதிரொலிக்கும் என உறுதிபடுத்தியுள்ளனர்.


இஸ்லாமிய குடியரசு நாடுகளை பாதுகாக்க மூன்றாம் உலக போருக்கும் சீனா தயாராக இருப்பதாக சீன தேசிய பாதுகாப்பு பல்கழைக்கழக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!