animated gif how to

மொராக்கோ தேர்தல்: இஸ்லாமிய கட்சியான (பி.ஜெ.டி) ஆட்சிக்கு வரும் என எதிர்ப்பார்ப்பு!

November 22, 2011 |

November 22, 2011.... AL-IHZAN World News

துனீசியாவை தொடர்ந்து மொராக்கோவிலும் இஸ்லாமிய கட்சி ஆட்சிக்கு வரும் என எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை மொராக்கோவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. ஜூலை மாதம் நடந்த மக்கள் விருப்ப வாக்கெடுப்பினை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது.


கூடுதல் மக்கள் உரிமைகளை அனுமதிக்கவேண்டும், ஊழலுக்கு முடிவு கட்டவேண்டும் என கோரி துனீசியா, எகிப்திற்கு பிறகு மொரோக்கோவிலும் போராட்டம் நடந்தது. ஆனால், சட்டத்துறையை திருத்தலாம் என்றும், பாராளுமன்ற அதிகாரத்தில் மேலும் பங்களிப்பை அளிக்கலாம் என்றும் மன்னர் முஹம்மது அளித்த உறுதியின் அடிப்படையில் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை நிறுத்தினர்...


அப்துல்லாஹ் பின் கிரான் தலைமையிலான மொராக்கோவின் முக்கிய கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட்(பி.ஜெ.டி) கட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 30 கட்சிகள் போட்டியிடும் பொதுத்தேர்தலில் 130 லட்சம் பேர் தங்கள் வாக்குகளை பதிவுச்செய்வர்.


சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலி நாட்டை விட்டு வெளியேறிய பிறகு துனீசியாவில் நடந்த ஜனநாயகரீதியான தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ள இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழாவின் ஈர்ப்பு மொராக்கோவிலும் காணப்படுகிறது. அந்நஹ்ழா துனீசியா தேர்தலில் 40 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!