animated gif how to

மக்காவில் நிலம் வாங்கி கட்டிடம் கட்ட இந்தியா ஆலோசனை

July 21, 2011 |

July 21, 2011.... AL-IHZAN India News

வரும் காலங்களில் ஹஜ் பயணிகளின் தேவையை முன்னிறுத்தி மக்காவில் நிலம் வாங்கிகட்டிடம் கட்டுவது குறித்து இந்தியா ஆலோசித்துவருகிறது. இதுத்தொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியும், ஹஜ் மிஷனும் பேச்சுவார்த்தை நடத்தின.
நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஷானவாஸ் ஹுஸைன், மவ்லானா மஹ்மூத் மதனி ஆகியோர் ஹஜ் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடுச் செய்ய வந்தபொழுது பேச்சுவார்த்தை ஹஜ் கமிஷனின் கண்காணிப்பாளரான ஃபய்ஸ் அஹ்மத் கித்வாயுடன் நடத்தினர். இந்தியாவிலிருந்து கடந்த ஆண்டும் ஒன்றேமுக்கால் லட்சம் பேர் ஹஜ்ஜுக்கு சென்றுள்ளனர்.
ஹஜ் கமிட்டி மூலமாக மட்டும் 1,25,000 பேர் சென்றுள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்...
மக்காவில் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகே 30 வருடத்திற்கு இடத்தை வாடகைக்கு வாங்குவது தொடர்பாகவும், அவசியத்திற்கு ஒப்ப வளர்ச்சிக்குறித்த திட்டத்தை கன்ஸுல் ஜெனரல் முன்வைத்தார். இதுக் குறித்து அரசுடன் விவாதிக்கப்படும் என ஷானவாஸ் ஹுஸைன் தெரிவித்தார். ஹஜ்காரியங்களைக்குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அவர் கூறினார்.ஹஜ்ஜிற்கான ஏற்பாடுகள் திருப்தியாக உள்ளதாக குழுவினர் மதிப்பிட்டனர்.
ஹஜ் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சவூதி ஹஜ் அமைச்சகம் அங்கீகரித்தது என்ற செய்தி தவறு என ஹஜ் கன்ஸுல் பி.எஸ்.முபாரக் தெரிவித்தார். ஹஜ் இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை சவூதி அரேபியா அங்கீகரித்ததாக ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் எ.அபூபக்கர் சென்னையில் கூறியிருந்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!