animated gif how to

முஸ்லிம் சமூகத்தை அவமதிக்கும் சிங்களப் பாடல்

October 18, 2010 |

சித்தி மனிலா என்ற பாடல் இராஜ் வீரரத்ன தயாரித்துள்ளார். இராஜ் பெசலா என்ற பிரபல சிங்களப் பாடகர் பாடி வெளிவந்துள்ளது. இந்த பாடலின் காட்சிகள் முஸ்லிம்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்றுவருகின்றது. இந்த பாடலின் சில காட்சிகள் மாதம் பிட்டி மஸ்ஜித் பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த பாடல் காதலையும் பாதாள உலக தாதாக்களையும் மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது .
இந்திய தமிழ் நாட்டு சினிமா கூத்தாடிகளின் முஸ்லிம் விரோத படங்களின் பாணியில் தொப்பியும் ஜுப்பாவும் அணித தாதாக்கள் இந்த பாடலில் வளம் வருகின்றனர் இதில் ஒருவர் புர்கா அணிந்த பெண்ணுடன் காதல் கொள்கின்றார் . இதில் புர்கா அணிந்த பெண் அவரின் நடத்தைகள் , தொப்பியும் ஜுப்பாவும் அணிந்த தாதாக்கள், மஸ்ஜிதில் காதல் காட்சி, அதான் ஒலியை பிரதிபலிக்கும் ஒரு ஒலி என்பன கடும் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது இதில் அகில இலங்கை ஜம்மியதுள் உலமா இந்த விடையத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது இந்த பாடலில் மொத்தமாக முஸ்லிம்  மற்றும் இஸ்லாமிய அடையாளங்கள் முற்றிலும் தவறாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

செய்தி: Lankamuslim



0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!