animated gif how to

Future Minds - 2014 தேசிய கல்வி,தொழில் வழிகாட்டல் கண்காட்சி ஆரம்பம்!

June 06, 2014 |

Future Minds - 2014 தேசிய கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சியினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளவில். இன்று முற்பகல் 9.00மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

'எவரையும் கைவிடோம்' ("No One Left Behind  ") என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சியானது, மாணவர்களுக்கு சிறந்த முறையில் உயர் கல்வியை  கற்க விரும்பும் மாணவர்களுக்கு அவ்வாறான உயர்கல்வி நிலையங்களை அறிமுகஞ்செய்து கொடுக்கும்.அவ்வாறே சிறந்த தொழில் வாய்ப்புக்களை பெற விரும்பும் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டும் நல்லதொரு வாய்ப்பாக அமையப்போகிறது.

தேசிய மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு "Talant Tank" என்ற போட்டி நிகழ்ச்சிளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு மடிக்கணனிகள், புகைப்பட கருவிகள், மற்றும் பிரின்டர் கருவிகள் என்பன பரிசாக வழங்கப்படும் என கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு நாலந்தா கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர் சங்கம் (NJOBA) இந்த இக்கண்காட்சியினை  ஏற்பாடு செய்துள்ளது. இக்கண்காட்சி எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை பொதுமக்கள் முற்றிலும் இலவசமாகவே பார்வையிடலாம்.

இதேவேளை, இம்மாதம் 14ஆம் 15ஆம் திகதிகளில் கண்டி சிட்டி மிஷனிலும் செப்டெம்பர் மாத் 6ஆம் 7ஆம் திகதிகளில் காலி நகர சபை மண்டபத்திலும் இக்கண்காட்சி நடைபெறவுள்ளன.

1 கருத்துரைகள் :

Yala national park said...

Good news all of srilanka people
Invite all travelers coming to srilanka most popular safari destination in yala national park
Book yala safari online reservation

Post a Comment

Flag Counter

Free counters!